புதுடெல்லி, குவகாத்தி என நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும், தேசிய காசநோய் நிறுவனத்திலும் செவிலியர் அதிகாரிகள் (Nursing Officer, Staff Nurse Grade- II) பதவிகளுக்கான NORCET எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கியமான நாட்கள்:
இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய காலம் :04.08.2022 முதல் 21.08.2022 (மாலை 5 மணி வரை)
நர்சிங் ஆபீசர் ஆள்சேர்ப்பு பொது திறன் தேர்வு (NORCET) 2022 நடைபெறும் நாள்: 11.09.2022
யார் விண்ணப்பிக்கலாம்:
இரண்டு வகையான அத்தியாவசிய தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நர்சிங் தொடர்புடைய படிப்புகளில் பி.எஸ்சி முடித்தவர்கள் பணி அனுபவம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம். இரண்டவதாக, குறிப்பிடப்பட்ட படிப்புகளில் டிப்ளமோ முடித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதலாவது:
பல்கலைக்கழகம் அல்லது மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில்-லிருந்து B.Sc Nursing / B.Sc (Hons) Nursing
(அல்லது)
பல்கலைக்கழகம் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட்/இந்தியன் நர்சிங் கவுன்சில் - லிருந்து B.sc. (Post Certificate)/ Post-Basic B.Sc. Nursing
b. மாநில / இந்தியன் நர்சிங் கவுன்சில் உடன் மருத்துவ பணிப்பெண் மற்றும் செவிலியராக பதிவு செய்திருத்தல்.
இரண்டாவது:
போர்டு அல்லது கவுன்சில் / மாநில நர்சிங் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்ட்டியூட் / இந்தியன் நர்சிங் கவுன்சில் -லிருந்து பொது செவிலியர் மருத்துவ பணிப்பெண்-ல் டிப்ளமோ (Diploma in General Nursing midwifery)
மாநில இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவ பணிப்பெண் - ஆக பதிவு செய்தல்
மேலே, குறிப்பிட்ட கல்வி தகுதியை பெற்ற பிறகு குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விகிதம்: ரூ.9300 முதல் ரூ. 34800 வரை (சம்பள ஏற்ற நிலை 7)
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான,விண்ணப்பக் கட்டணம் ரூ.3000ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.2400 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலக்கு பெறுகிறார்கள்.
இதையும் வாசிக்க: மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - மருத்துவக் கல்வி இயக்ககம்
வயது வரம்பு:
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 21.08.2022 அன்று 18-30-க்கு இடையில் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். எவ்வாறாயினும், ஒதுக்கப்படாத இடங்களுக்கு போட்டியிடும் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு தளர்வு அளிக்கப்படாது.
அவ்வப்போதைய நிலவரங்களை aiimsexams.ac.in என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) 2022
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.