நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ஸ்டெபன்டரி ட்ரெய்னி ஆபரேட்டர் பிரிவுகளின் கீழ் 56 பணியிடங்களும், ஸ்டெபன்டரி ட்ரெய்னி மெயின்டெய்னர் பிரிவுகளின் கீழ் 66 பணியிடங்களும் என மொத்தம் 122 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு
  • News18
  • Last Updated: November 10, 2018, 8:13 PM IST
  • Share this:
மத்திய அரசு நிறுவனமான நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் சுமார் 122 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தியாவில் அணுசக்தி மின் உற்பத்தியில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநில ராவட்பாட்டா கிளையில் `ஸ்டெபன்டரி ட்ரெய்னி ஆபரேட்டர்' (Stipendiary trainee operator) பிரிவுகளின் கீழ் 56 பணியிடங்களும், `ஸ்டெபன்டரி ட்ரெய்னி மெயின்டெய்னர்' (Stipendiary trainee maintainer)  பிரிவுகளின் கீழ் 66 பணியிடங்களும் என மொத்தம் 122 பணியிடங்கள் காலியாக உள்ளன. 

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


ஊதியம் எவ்வளவு? 2 வருட பயிற்சிக்குப் பின் மாதம்தோறும் ரூ.21,700 ஊதியம் கிடைக்கும். பயிற்சிக் காலத்தின்போது மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும்.

தேர்வு முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 14. மேலும் விவரங்களுக்கு www.npcilcareers.co.in, https://npcilcareers.co.in/RAPSST2018/documents/Advt.pdf ஆகிய வலைதளங்களை பார்க்கவும்.

Also watch
First published: November 10, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading