என்.டி.பி.சி. (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள 107 பணியிடங்கள்!

இந்த 107 இடங்களில் டிப்ளமா என்ஜினியர் பணிக்கு 55 பேரும், ஐடிஐ ட்ரெய்னி பணிக்கு 42 பேரும், லேப் அசிஸ்டென்ட் பணிக்கு 6 பேரும், அசிஸ்டென்ட் ட்ரெய்னி பணிக்கு 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

என்.டி.பி.சி. (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள 107 பணியிடங்கள்!
என்.டி.பி.சி.,யில் வேலை
  • News18
  • Last Updated: November 14, 2018, 8:41 PM IST
  • Share this:
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல்மின் கழக நிறுவனத்தில் (என்.டி.பி.சி.) 107 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 24.

எந்தெந்தப் பிரிவுகள்: இந்த 107 இடங்களில் டிப்ளமா என்ஜினியர் பணிக்கு 55 பேரும், ஐடிஐ ட்ரெய்னி பணிக்கு 42 பேரும், லேப் அசிஸ்டென்ட் பணிக்கு 6 பேரும், அசிஸ்டென்ட் ட்ரெய்னி பணிக்கு 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வயதுவரம்பு: 24-11-2018 நிலவரப்படி டிப்ளமா என்ஜினியர் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், பிற பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் டிப்ளமா என்ஜினியரிங் படித்தவர்கள் என்ஜினியர் பணிக்கும். பிற பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ படித்தவர்களும், பி.எஸ்.சி. வேதியியல், இன்டஸ்ரியல் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 14. மேலும் விவரங்களுக்கு https://www.ntpc.co.in என்ற வலைதளத்தில் பார்க்கவும்.

Also watch
First published: November 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading