Home /News /employment /

இளைஞர்கள் கவனத்திற்கு..! - சென்னையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்

இளைஞர்கள் கவனத்திற்கு..! - சென்னையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

நாளை(12-09-2022) முதல் மாணவர் சேர்க்கை தொடங்க இருக்கிறது. 18-45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னை கிண்டியில் செயல்படும் தேசிய சிறுதொழில்கள் கழகம் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. வேலை தேடுவோர், தொழில் தொடங்கும் எண்ணமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சி: 

































    பயிற்சித் திட்டம்கால அளவுஅடிப்படைத் தகுதி
    Software Analysis6 வாரம் ஏதேனும் ஒரு பட்டம்
    Telecom Terminal Equipment Application Developer (Android Application)6 வாரம் ஏதேனும் ஒரு பட்டம்
    Product Design Engineer (Using CRED & Solidworjs - 3டி பிரிண்டிங் மற்றும் 3டி ஸ்கேனர்)10 வாரம்மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல்/ மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளில் பொறியியல் பட்டம்
    Total Design Engineer10 வாரம்மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல்/ மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளில் பொறியியல் பட்டம்


    AIEDP

    (தொழில்முனைவோர் மேம்பாடு )
    5 வாரம்10ம் வகுப்பு தேர்ச்சி

    பயிற்சிக் கட்டணம்:  முற்றிலும் இலவசம்

    நாளை(12-09-2022) முதல் மாணவர் சேர்க்கை தொடங்க இருக்கிறது. 18-45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு மட்டும் விடுதி வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுளளது.

    விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் நேர்காணல் தேர்வுக்கு வரவேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி, தொடர்பான அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் ஆட்தேர்வுக்கு (Walk-in Interview)வர வேண்டும்.

    இதையும் வாசிக்க: JEE முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது

    மேலும், விவரங்களுக்கு: No: B-24, NSIC-STP Complex Ekkatuthangal, 100 Feet Rd, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 60003 என்ற முகவரியை அணுகலாம்.

    7305375041/ 044-22252335 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Employment, Employment and training department, MSME

    அடுத்த செய்தி