இந்திய அணுசக்தி நிறுவனத்தில் (NPCIL) வேலைவாய்ப்பு!

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

news18
Updated: December 12, 2018, 9:33 PM IST
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் (NPCIL) வேலைவாய்ப்பு!
அணுசக்தி நிறுவனத்தில் வேலை!
news18
Updated: December 12, 2018, 9:33 PM IST
இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.) இணை மேலாளர், ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 94 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி நாள் டிசம்பர் 19.

வயதுவரம்பு: இணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இணை மேலாளர் பிரிவில் துறைவாரியாக காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதி குறித்து வலைதளத்தில் பார்க்கவும்.

தேர்வு முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் படை வீரர்கள், பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 19. மேலும் விவரங்களுக்கு https://npcilcareers.co.in/DMHQNT2018/documents/information.aspx?info=HowToApply, https://npcilcareers.co.in/DMHQNT2018/documents/Advt.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

First published: December 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்