Home /News /employment /

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.. தேதி அறிவிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.. தேதி அறிவிப்பு


பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி

வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும். நேரடியாக அனுப்பப்படாது.

    பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு  ஜூலை 16,17,18 ஆகியத் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல்டெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2021 டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

    மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ்,பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விபரஙகள சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ | உள்துறை அமைச்சகத்தில் 750க்கும் மேற்பட்ட காலியிடங்கள்...டிகிரி போதும் - எப்படி விண்ணப்பிப்பது

    தற்பொழுது முதல் கட்டமாக Textile Technology, Production Engineering, Printing Technology, Physics, Chemistry, English மற்றும் Mathematics ஆகியப் பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஜூலை 16ம் தேதி நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். மற்றப் பாடங்களுக்கு 17,18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

    வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும். நேரடியாக அனுப்பப்படாது. அழைப்பு கடிதத்தினை 14ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி