எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 5636 தொழில்பழகுனர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தென்கிழக்கு பிராந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 5636
இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பபங்களை ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கல்விக்கான தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நியமனத்தில் இடஒதுக்கீட்டுப் முறை பின்பற்றப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுதியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சலுகையினை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுக்கான தகுதி:
வயதுக்கான தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் 27/06/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: இந்திய கடற்படையில் 303 காலி இடங்கள் : முழு விவரம் இதோ
தெரிவு செய்யப்படும் முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பபதாரர் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு: 11.52 லட்சம் பேரில் 13 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி
பயிற்சி காலம்: ஓராண்டு.
அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.
விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி https://rrcnfr.in/actaprt22nfr/. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 30/06/2022 இரவு 05 மணி வரை. விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டயாமாகும்.
Notification for Engagement of Act Apprentices over N.F. Railway for 2020-23
ஆன்லைனில் விண்ணப்பிக்க
இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.