டெல்லி மருந்தாக்கியல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் குரூப் பி & சி எனப்படும் கற்பித்தல் அல்லாத பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 பதவிகளுக்கு 45 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. ரூ.19,900 முதல் ரூ.1,51,100 வரை இப்பணியிடங்களுக்குச் சம்பளம் வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Section Officer | 1 | ரூ.47,600-1,51,100 |
Assistant Section Officer | 2 | ரூ.44,900-1,42,400 |
Assistant Grade-II | 3 | ரூ.25,500-81,100 |
Office Assistant | 12 | ரூ.19,900-63,200 |
Tecnical Assistant | 5 | ரூ.29,200-92,300 |
Lab Technician | 4 | ரூ.19,900-63,200 |
Lab Assistant | 7 | ரூ.19,900-63,200 |
Sr.Lab Assistant | 7 | ரூ.25,500-81,100 |
Jr.Stenographer | 2 | ரூ.25,500-81,100 |
Store Keeper | 1 | ரூ.25,500-81,100 |
Assistant Store Keeper | 1 | ரூ.19,900-63,200 |
வயது வரம்பு:
Section Officer/Assistant Section Officer பதவிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகவுள்ளது. Jr.Stenographer பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆக உள்ளது. இதர பதவிகளுக்கு வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Section Officer | பட்டப்படிப்பு மற்றும் 8 வருட அனுபவம் |
Assistant Section Officer | பட்டப்படிப்பு மற்றும் 5 வருட அனுபவம் |
Assistant Grade-II | பட்டப்படிப்பு மற்றும் 2 வருட அனுபவம் மேலும் தட்டச்சு |
Office Assistant | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு |
Tecnical Assistant | Pharmacy/ Allied Health Sciences/Science (PCM/PCB) பாடத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது 2 வருட டிப்ளமோ. |
Lab Technician | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பார்மசியில் டிப்ளமோ |
Lab Assistant | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பார்மசி/Allied Health Science டிப்ளமோ |
Sr.Lab Assistant | பார்மசியில் இளங்கலைப் பட்டம்/ டிப்ளமோ + 4 வருட அனுபவம் |
Jr.Stenographer | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம் /ஹிந்தியில் Short hand |
Store Keeper | Commerce/ Economics /Statistics/Business Studies/ Public Administration பாடத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் 5 வருட அனுபவம் |
Assistant Store Keeper | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு |
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்களைத் தேர்வு செய்வர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://dpsru.edu.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக குரூப் சி பணிகளுக்கு ரூ.1,200 மற்றும் குரூப் பி பணிகளுக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி விண்ணப்பங்களுக்குச் சலுகைகள் உண்டு.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://cdn.digialm.com//EForms/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.11.2022.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job vacancies, Jobs, University