Home /News /employment /

'அக்னிபத்' திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது - போராட்டக்காரர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை: பாதுகாப்பு அமைச்சகம்

'அக்னிபத்' திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது - போராட்டக்காரர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை: பாதுகாப்பு அமைச்சகம்

தற்போது 46 ஆயிரம் பேர் என்ற அளவில் நியமிக்கப்படும் அக்னி வீரர்களின் எண்ணிக்கை, நான்கைந்து ஆண்டுகளில் ஒன்றே கால் லட்சமாக உயரும் என்று கூறினார்.

    அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற எண்ணமில்லை என்றும், புதிய  திட்டத்தின் மூலமே ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திட்டம் குறித்து பாதுகாப்புத்துறை விரிவாக விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் அனில் பூரி, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது 46 ஆயிரம் பேர் என்ற அளவில் நியமிக்கப்படும் அக்னி வீரர்களின் எண்ணிக்கை, நான்கைந்து ஆண்டுகளில் ஒன்றே கால் லட்சமாக உயரும் என்று கூறினார்.

    மேலும் அக்னி வீரர்களுக்கு வெவ்வேறு துறைகளின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும், அவை போராட்டங்களின் விளைவாக வெளியான அறிவிப்புகள் அல்ல என்றும் தெரிவித்தார். அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்று கூறிய அவர், இந்த திட்டத்தில் சேருவோர், தாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை என காவல்துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: Agnipath, Army jobs

    அடுத்த செய்தி