NLC Recruitment 2021: நெய்வேலியில் 65 SME ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கோப்புப் படம்

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள NLCIL, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் இருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தெர்மல் ஸ்டேஷன்களில் நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் இரண்டு வருட காலத்திற்கு SME ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நேஷனல் லிக்னைட் அண்ட் கோல் இந்தியா லிமிடெட் (NLCIL) அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள NLCIL, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைக்கான மொத்த காலி பணியிடங்கள் 65.

SSLC தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் டிரேடில் அதற்கு இணையான அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்கள், அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://www.nlcindia.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று NLCIL அறிவித்துள்ளது. இந்த SME ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்தியர்கள் மட்டுமே தகுதியானவர்கள். விண்ணப்பதாரரின் விண்ணப்ப தேர்வு எந்தவொரு கட்டத்திலும் அதாவது தேர்வுக்குப் பிறகு அல்லது சேரும் போது நிராகரிக்கப்படும் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல விண்ணப்பதாரர் வழங்கும் தகவல் தவறானது அல்லது விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்கு இணங்கவில்லை எனில், விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். நடைமுறை சோதனைக்கான விண்ணப்பதாரார்களின் ஷார்ட்லிஸ்ட்டுக்கான விண்ணப்பங்களை ஆராய்வது என்பது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் விண்ணப்பதாரர்கள் இணைத்து வழங்கும் ஆவணங்கள் / சான்றிதழ்களின் அடிப்படையில் இருக்கும்.

SME ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான முக்கியமான தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கிய தேதி: 02 ஜூன் 2021, 10.00 மணி முதல்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 14 ஜூன், 2021 17.00 மணி வரை

ஊதியம்:

மேற்கண்ட SME ஆப்ரேட்டர் பதவிக்கு செலக்ட் செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் F5-W Grade-ல் இரண்டு வருட காலத்திற்கு மாதத்திற்கு ரூ.38,000/ - என்ற அளவிலான ஒருங்கிணைந்த ஊதியத்துடன் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் முறை:

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 65 SME ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்கள் பிராக்டிக்கல் டெஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இருப்பினும் விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்வதற்காக ஸ்கிரீனிங் டெஸ்ட் நடத்தும் உரிமையை நிர்வாகம் கொண்டுள்ளது. மேலும் பிராக்டிக்கல் டெஸ்ட்டிற்கான சரியான தேதி மற்றும் இடம் NLCIL வெப்சைட்டில் வெளியிடப்படும். பிராக்டிக்கல் டெஸ்ட்டில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி வரிசையில் பணியிடத்திற்கான இறுதி தேர்வு இருக்கும். எஸ்சி / ஓபிசி (என்சிஎல்) / ஈ.டபிள்யூ.எஸ் பிரிவினரில் இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்களின் குறைந்தபட்ச தகுதி சதவீதத்தை பெறுவதற்கு உட்பட்டது.

Also read... Southern Railway Recruitment 2021: தெற்கு ரயில்வேயில் 3378 காலி பணியிடங்கள் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை!

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் மூலம் தேவையான சான்றிதழ்கள் / கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அப்ளிகேஷன் ஃபார்மெட் NLCIL வெப்சைட்டில் Advt. No. 04/2021 என்பதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும், இதனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மேல் "SME OPERATOR FOR Application (Advt.No.04 / 2021)" என்று குறிப்பிட்டு போஸ்ட் / கூரியர் மூலம் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE,
NLC INDIA LIMITED
BLOCK-1, NEYVELI, TAMILNADU - 607801.

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய:

https://www.nlcindia.in/new_website/careers/Application%20Format%20for%20SME%20Operators%20Final.pdf



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: