ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் 635 பேருக்கு அப்பரென்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25.

எந்தெந்த பிரிவுகள்: டெக்னீசியன் பிரிவில் 335 இடங்களும், பட்டதாரிகள்  பிரிவில் 300 இடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவில் விண்ணப்பிப்போர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிப்ளமா இன்ஜினியரிங் பிரிவுகளில் 55 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

என்.எல்.சி. நிறுவனம்

பட்டதாரிகள் பிரிவில் விண்ணப்பிப்போர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 55 % மதிப்பெண்களுடன் பி.இ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 25. மேலும், விவரங்களுக்கு https://www.nlcindia.com/new_website/careers/NET-GAT-TAT-ADVERTISEMENT.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

See Also:

Published by:DS Gopinath
First published:

Tags: Neyveli, NLC