என்ஐடி (NIT) கல்வி நிறுவனத்தில் 65 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 14.

என்ஐடி (NIT) கல்வி நிறுவனத்தில் 65 காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
என்ஐடி-இல் வேலைவாய்ப்பு
  • News18
  • Last Updated: December 9, 2018, 6:06 PM IST
  • Share this:
இன்ஜினியரிங் கல்விக்குப் பெயர்போன ஐஐடி-க்கு அடுத்த நிலையில் என்ஐடி (NIT) எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்  உள்ளது. இந்த நிறுவனத்துக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் கிளைகள் இருக்கின்றன.

ஹரியானா மாநிலம், குருக்‌ஷேத்திரா நகரிலுள்ள என்ஐடி-ல் தொழில்நுட்ப அதிகாரி, சூப்பிரன்டன்ட், அக்கவுன்டன்ட் உள்ளிட்ட 65 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்கள் 15 பிரிவுகளாக பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப வயதுவரம்பு மாறுபடும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். அந்தந்தப் பணிக்கு தேவையான கல்வித் தகுதியை வலைதளத்தில் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரும், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 14. தேர்வு முறை, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களுக்கு https://nit.thinkexam.com/document/PDF/DetailedAdvertisementNo.41.2018.pdf, https://nit.thinkexam.com/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.Also watch

First published: December 9, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading