முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / கோயம்புத்தூர் மத்திய சிறையில் பணி.. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளன..!

கோயம்புத்தூர் மத்திய சிறையில் பணி.. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளன..!

கோயம்புத்தூர் மத்தியச் சிறை

கோயம்புத்தூர் மத்தியச் சிறை

Night watchman in Coimbatore Central Prison : கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் இரவுக் காவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறையில் இரவுக் காவலர் காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடம் பொது இன சுழற்சி மூலம் நிரப்பப்படவுள்ளது.

01.07.2022 அன்று வரை தேதியில் 32 வயதுக்கு மிகாமல் இருக்கும் நபர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கும் படி கோவை மத்தியச்  சிறை கண்காணிப்பாளர் மா.ஊர்மிளா தெரிவித்துள்ளார். விண்ணப்பதார்கள் சாதிச் சான்றிதழ் நகலுடன்  சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை  “சிறை கண்காணிப்பாளர், மத்தியச் சிறை, கோவை-18 என்ற முகவரிக்கு 28.02.2023 தேதிக்குள் தபால் மூலம் பெறும் படி விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read : இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : வெளியான தேர்வு தேதி

மேற்படி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு தேதி மற்றும் நேர விவரம் தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Coimbatore, Jobs