Home /News /employment /

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை

NHAI recruitment 2022: இந்தப் பணியில் சேருவதற்கு தகுதி என்ன, வயது வரம்பு மற்றும் எப்படி விண்ணப்பம் செய்வது ஆகிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலை துறையில் 2022ஆம் ஆண்டுக்கான பணி நியமன நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் (என்ஹெச்ஏஐ) ஹைதராபாத் மண்டல அலுவலகம் சார்பில், தகுதி வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தொழில்நுட்ப பிரிவில் யங் புரோபஷனல் என்ற பணிக்கு நியமனம் நடைபெற உள்ளது. இந்த பணியின் காலம் ஓர் ஆண்டு ஆகும். தொடர்புடைய மண்டல அலுவலகத்தின் தேவை மற்றும் பணியாளரின் பணித்திறன் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த பணியின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நியமனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்தப் பணியில் சேருவதற்கு தகுதி என்ன, வயது வரம்பு மற்றும் எப்படி விண்ணப்பம் செய்வது ஆகிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

என்ஹெச்ஏஐ நியமன நடவடிக்கைகள் - 2022:

யங் புரோபஷனல் : 9 காலியிடங்கள்

தேவையான தகுதி:

நேர்காணல் நடைபெறும் நாளில் விண்ணப்பதாரர் 32 வயது மிகாதவறாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்த பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பிடெக் சிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருப்பதுடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். சாலை மற்றும் கட்டுமானத் துறையில் முன் அனுபவம் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதிய விவரம்:

யங் புரோபஷனல் பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். பணி நியமன அறிவிப்பு குறித்த அறிவிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/NIA-for-YPs.pdf

விண்ணப்பம் செய்வது எப்படி?

* என்ஹெச்ஏஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் https://nhai.gov.in
* ரெக்ரூட்மெண்ட் / வேகன்ஸி பிரிவுக்கு சென்று யங் புரோபஷனல் ரெக்ரூட்மெண்ட் என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
* இப்போது பிடிஎஃப் பைல் ஒன்று டவுன்லோட் ஆகும். அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை படிப்பதுடன் விண்ணப்பத்தை எடுத்துக் கொள்ளவும்.
* விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து, அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவிலான புகைப்படத்தை ஒட்டவும். இதற்கு பிறகு அதை ஒரு கவரில் வைத்து மூடவும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரிஜிஸ்டர் போஸ்ட் அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கலாம் அல்லது ஹைதராபாத் மண்டல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
* விண்ணப்ப கவர் மீது யங் புரபஷனல் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர விண்ணப்பிக்கிறேன் என்று எழுதியிருக்க வேண்டும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Job Vacancy

அடுத்த செய்தி