தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) பணிவாய்ப்பு

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 60,000 (அனைத்துப் படிகளும் உள்பட) வழங்கப்படும்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 5:55 PM IST
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) பணிவாய்ப்பு
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு
Web Desk | news18
Updated: December 6, 2018, 5:55 PM IST
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) மத்திய அரசு சார்பிலான நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் Young Professional (Finance) பணியின் கீழ் 70 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவை கான்டிராக்ட் அடிப்படையிலான பணியிடங்களாகும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 11-12-2018 நிலவரப்படி 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: வணிகவியல், கணக்கியல் பட்டப் படிப்புகளுடன் ஐ.சி.ஏ.ஐ., ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., எம்.பி.ஏ. (நிதி) பயிற்சி பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 60,000 (அனைத்துப் படிகளும் உள்பட) வழங்கப்படும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 11.

Loading...

தேர்வு முறை உள்ளிட்ட பிற விவரங்களுக்கு http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1174/1_Detail_advertisement_for_the_post_of_Young_Professional_document.pdf, http://www.nhai.gov.in/vacancies-details.htm?1174 ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also Watch:

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...