தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 50 காலியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்க வேண்டும் விவரங்கள் இங்கே
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 50 காலியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்க வேண்டும் விவரங்கள் இங்கே
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
NHAI Recruitment 2022 | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 50 இடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 13/07/2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள 50 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.nhai.gov.in/#/ என்ற இணையதள பக்கத்தில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை : National Highways Authority of India (NHAI)
காலியாக உள்ள வேலையின் பெயர் : Deputy Manager பதவிக்கு 50 இடங்கள் காலியாக உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் 13.07.2022 (மாலை 6:00 மணி) க்குள் சமர்ப்பிக்கலாம்.
காலியிட விவரம்
சம்பள விவரம் : விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி விவரம் : அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் (Engineering) கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தகுதி
வயது தகுதி : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அதிக பட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பிக்கும் நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் Short List செய்யப்பட்டு Written Test மற்றும் Personality Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.