நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 312 பேருக்கு அதிகாரி பணியிடங்கள்!

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100-ம், மற்றவர்கள் ரூ. 600-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 312 பேருக்கு அதிகாரி பணியிடங்கள்!
நியூ இந்தியா அஸ்யூரன்ஸில் வேலைவாய்ப்பு!
  • News18
  • Last Updated: December 24, 2018, 5:26 PM IST
  • Share this:
நாட்டின் முக்கிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ். இந்த நிறுவனத்தில் 312 அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

பிரிவு வாரியாக: இந்த 312 பணியிடங்களில் கம்பெனி செகரெட்டரி பணிக்கு 2 இடங்களும், சட்ட அதிகாரி பணிக்கு 30 இடங்களும், நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் 35 இடங்களும், பொதுப் பிரிவில் 245 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-12-2018 நிலவரப்படி 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதி வேறுபடுகிறது. கம்பெனி செகரெட்டரி, எஃப்.சி.எஸ். பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்கள், சட்டப் படிப்பு, கலை, அறிவியல் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100-ம், மற்றவர்கள் ரூ. 600-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 26. மேலும் விவரங்களுக்கு https://www.newindia.co.in/portal/readMore/Recruitment, https://www.newindia.co.in/cms/d0468c0e-105f-4b95-bf16-8663aa637630/Detailed%20Advertisement%20for%20the%20Recruitment%20of%20312%20Administrative%20Officers%20(Generalists%20and%20Specialists)%20(Scale%20I)%202018.pdf?guest=true ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.Also watch

First published: December 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading