Home /News /employment /

இலவச ஐஏஎஸ் பயிற்சி: சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு 1 கோடியே 67 லட்சம் ரூபாய் விடுவிப்பு

இலவச ஐஏஎஸ் பயிற்சி: சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு 1 கோடியே 67 லட்சம் ரூபாய் விடுவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு  1520 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சமூகநீதித் துறை அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  பட்டியல் கண்ட   சமுதாயத்தினருக்கு இலவச பயிற்சி வழங்கும் திட்டத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நீட், ஜேஇஇ, யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், தகுதியுள்ள ஓபிசி, எஸ்சி மாணவர்களுக்கு  இலவச பயிற்சியும், கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில்  திட்டத்தின் செயலாக்கம் குறித்து  நாடாளுமன்ற  கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

    " இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை இந்தத் துறை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. 2020ல் மூன்றாம்  நபர் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. மேலும், 2021ல் திட்டப் பயனாளிகளிடம்  நேரடியாக கருத்துக் கேட்கப்பட்டது. அதனடிப்படையில், மத்திய  சமூக நீதித் துறையின் மூலம் தகுதியான விண்ணப்பித்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும்  விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்தைந் பேரில் எந்த பயிற்சி நிறுவனங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று  திருத்தங்கள் செய்யப்பட்டது (Mode- 2). 2022-23 கல்வியாண்டு முதல், இதன் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தது.

    நாடு முழுவதும்  31 தனியார் பயிற்சி நிறுவனங்களின் மூலம் 47 பயிற்சி மையங்கள்  இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் சென்னை சாந்தி காலனியில்  இயங்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியியை அமைச்சகம் தேர்வு செய்தது. நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கையை அகாடமி மேற்கொன்டு வந்தது.

    இத்திட்டத்தின் வாயிலாக  2016-17 முதல் 2019-20 வரை, மத்திய பணியாளர் தேர்வாணையம், மாநில பணியாளர் தேர்வாணையம், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு  1520 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சமூகநீதித் துறை அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

    TNPSC : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    கொரோனோ நோய்த் தொற்று காரணமாக  2020 -21 கல்வியாண்டில் திட்டம் செயல்படுத்தப்பட வில்லை என்றும், 2022-23 கல்வியாண்டு முதல் புதிய சேர்க்கை மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

    திட்டம் தொடங்கப்பட்டத்தில் இருந்து, தற்போது வரை  சங்கர் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு 1 கோடியே 67 லட்சம் ரூபாய்  (1,67,64,700) விடுவிக்கப்பட்டதாக  பதிலில் தெரிவிக்கப்பட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Shankar IAS academy

    அடுத்த செய்தி