ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தொழில் தொடங்க ரூ. 75 லட்சம் வரை மானியம்... படித்த இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு

தொழில் தொடங்க ரூ. 75 லட்சம் வரை மானியம்... படித்த இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

தமிழ்நாடு அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) ரூ. 75 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  NEETS SCHEME: சமீபத்திய தரவுகளின் படி, பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்வதற்காக,    மாநில வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 67 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், கலை, அறிவியல், மருத்துவம் போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்புகள்  முடித்தவர்கள்  எண்ணிக்கை மட்டும் தோராயமாக 22  லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Lokniti-CSDS-KAS Youth Survey 2016 ஆய்வறிக்கை,  21-35 வயதுக்குட்பட்டவர்களில் 65%க்கும் அதிகமானோர், தனியார் துறைகளை விட அரசு பணிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதாக கூறுகிறது. ஆனால், அரசு வேலைவாய்ப்புகள் இன்றைய இளைஞர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாது.

  உதாரணமாக,  கடந்த 7 ஆண்டுகளில் மட்டுமே மத்திய அரசுப் பணிகளுக்கு சுமார்  22 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதில்,0.3% விண்ணப்பங்கள் மட்டுமே நிரந்தர வேலைக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு துறைகளுக்கான வேலைவாய்ப்பிலும் இதே நிலைதான். டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகபட்சமாக 20 ஆயிரம் காலிபணியிடங்களுக்கு ஆட்சேர்ப்ப்பு அறிவிக்கையை வெளியிட்டு வருகிறது.

  இன்றைய சமகால பின்னணியில், அரசு வேலைவாய்ப்பைத் தாண்டி சுயமாக தொழில் தொடங்குவது குறித்து பேச வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அதன் அடிப்பிடையில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

  புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்):

  முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்குக் கை கொடுக்கவும் ஊக்கமளிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்தவித நித ஆதாரமும் இல்லாமல், உங்களிடம் தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தால் போதுமானது.

  முதல் தலைமுறை தொழில் முனைவோர் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களை மேற்கொள்ள ரூ. 75 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது (அதாவது, திட்டத்தொகையில் 25% மானியமாக வழங்கப்படும்).

  2022- 23 நீட்ஸ் திட்ட பயனாளிகள்

  இது Front- End Subsidy ஆகும். தொழில் துவங்கி வங்கி கடன் செலுத்தும் போதே விண்ணப்பித்தாரருக்கு மானியம் விடுவிக்கப்படும்.

  இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோரின் வயது 21-35 க்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பெண்கள்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்/ பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை தளர்வு உண்டு.

  இதையும் வாசிக்க: ஜிஎஸ்டி மூலம் அதிக லாபத்தை பெறுவது எப்படி? இதோ அதற்கான எளிமையான தீர்வு

  அடிப்படைத் தகுதிகள்: 

  12ம் வகுப்பு முடித்தவர்கள், பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.  புதிதாக தொடங்கும் திட்டத் தொகையின் (Capital Expendture + Marginal Money For Working Capital) ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை இருக்க வேண்டும்.

  திட்டத்தில் பயனுற விரும்புவோர், சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அளிக்கும் 15 நாட்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

  இந்த பயிற்சியில், தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்ட அறிக்கை தயாரிப்பது, வங்கிகள் மற்றும் தமிழ்நாட்டு முதலீட்டுக் கழகத்திடம் இருந்து கடன்களைப் பெறுவதற்கான ஆலசோணைகள் வழங்கப்படும்.

  வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் காலம் - 5 முதல் 7 ஆண்டுகள்

  வங்கிக் கடனுக்கான வட்டியில், 3% பின்-  வட்டி மானியமாக (Interest Subvention)  திருப்பி செலுத்தும் காலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

  மேலும் தெரிந்து கொள்ள:

  தொழில் முனைவோர் பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில், 9444556099, 9677152265, 044-22252081/22252082 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  நேரடியாக அணுக வேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,

  சிட்கோ தொழிற்பேட்டை,

  பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல்,

  சென்னை – 600032 ஆகும்.

  இணைப்புகள்: 

  NEEDS:

  MSME Entrepreneur Login For Filing NEEDS,UYEGP,Capital Subsidy and other Incentives  

  Entrepreneurship Development and innovation institute Chennai

  Published by:Salanraj R
  First published:

  Tags: Entrepreneurship