ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் (National Career Service Centre for SC/ST) டாடா
கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை நடத்த இருக்கிறது. இப்பயிற்சியில் சேர்ந்து பயில்வதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் ,"
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட தகுதிகள் இருக்கவேண்டும்.
கல்வி தகுதி: பிஏ/பிகாம்/பிசிஏ (2020-21-ல் தேர்ச்சி பெற்றிருத்தல்) & 2022-ல் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள்
பிரிவு: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணாக்கள்
வயது வரம்பு: 28 வயது க்கு கீழ்
பயிற்சி காலம்: 100 மணி
காலி இடங்கள்: 50
பயிற்சி முடித்தவுடன் அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை 10.05.22 அன்று காலை 11.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
மண்டல வேலைவாய்ப்பு உதவி அதிகாரி,
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவை மையம்,
சாந்தோம் நெடுஞ்சாலை,
சென்னை 600 004, (வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம், மூன்றாவது தளம்)
மேலும் விபரங்களுக்கு 044-24615112/ 8248962842 என்ற தொலைபேசி அல்லது செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
TNPSC Group 4 : குரூப் 4 தேர்வுக்கு 17.83 லட்சம் பேர் விண்ணப்பம்: இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம்
புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதில் ஆர்வமற்ற 50% இந்தியர்கள் - ஷாக் ரிப்போர்ட்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.