மத்திய அரசின் பொது நிறுவனமான என்.சி.எல் நிறுவனம் நிலக்கரி உற்பத்தியில் முதன்மையாகச் செயல்பட்டு வருகிறது. கோல் இந்திய நிறுவனத்தில் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் சுரங்கப் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான முழு விவரங்கள் கீழ் வருமாறு.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Mining Sirdar T&S | 374 | ரூ.31,852/- |
Surveyor T&S | 31 | ரூ.34,391/- |
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்களுக்கு வயது 18 இல் இருந்து 30 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது குறித்த இதர தளர்வுகளுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
Mining Sirdar in Techinical & Supervisory Grade C பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Mining Sirdar சான்றிதழ், கேஸ் டேஸ்டிங் மற்றும் முதல் உதவி சான்றிதழ் தேவை அல்லது மைனிங் டிப்ளமோ/டிகிரி ஒவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Surveyor in Technical & Supervisory Grade B பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Surveyor சான்றிதழ் அல்லது Mining/Mine Surveying Engineering டிகிரி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பர் என்று தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் என்.சி.எல் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.1180/- செலுத்த வேண்டும். SC/ST/PwBD/ESM பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://cdn.digialm.com/EForms/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22/12/202.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs