முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / NCERT கல்வி நிறுவனத்தில் 292 காலியிடங்கள் அறிவிப்பு

NCERT கல்வி நிறுவனத்தில் 292 காலியிடங்கள் அறிவிப்பு

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

NCERT Recruitment 2022 for 292 vacancies Assistant Professor: www.ncert.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். ஒரு பதவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியே விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (NCERT) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 292

பேராசிரியர் - 40;

இணை பேராசிரியர் - 97;

உதவிப் பேராசிரியர் - 155;

பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள்:

தொடர்புடைய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆராய்ச்சி பிரிவுகளில் குறைந்தது 10 ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு செய்திருக்க வேண்டும். தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்தது 10 ஆண்டுகள் இணைப் பேராசிரியராக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இணை பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள்: 

முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்;

தொடர்புடைய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்;

ஆராய்ச்சி பிரிவுகளில் குறைந்தது 7 ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு செய்திருக்க வேண்டும்

தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர்  பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள்: 

முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்;

யுஜிசி (அல்லது) சிஎஸ்ஐஆர், அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும்  உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்;

இதையும் வாசிக்க: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அப்டேட்!

முக்கியமான நாட்கள்: 

இனையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க : 08/10/2022  முதல் 28/10/2022

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான, விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இதையும் வாசிக்க:  2,748 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது...விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி? 

www.ncert.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். ஒரு பதவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியே விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING

top videos

    Advertisement No. 172/2022

    First published:

    Tags: Job Vacancy, Recruitment