ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கோவை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு வேலைவாய்ப்பு

அரசு வேலைவாய்ப்பு

NCC Coimbatore Recruitment 2021 : கோவை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர், அலுவலக உதவியாளர் மற்றும் பிற பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் காலியாக உள்ள 06 காலிப்பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நபர்கள் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு Offline மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

நிறுவனம்தேசிய மாணவர் படை
வேலையின் பெயர்ஓட்டுனர், அலுவலக உதவியாளர் மற்றும் பிற
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை06 காலிப்பணி இடங்கள்
தேர்வு செய்யப்படும் முறைWritten test ,Skill test,Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 08 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
சம்பள விவரம்
வேலையின் பெயர்சம்பள விவரம்
Driverரூ.19500-62000/-
Office Assistantரூ.15700-50000/-
Chowkidar (EX-Serviceman Category Only)ரூ. 15700-50000/-

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி04.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி30.11.2021
விண்ணப்ப முறைOffline மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிThe Group Commander, NCC Group Headquarters, 304-A, RR Naidu Industrial Area, Trichy Road, Singanallur Post, Coimbatore – 641 005

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_office_assistant_0.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.

கோவை தேசிய மாணவர் படை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • கோவை தேசிய மாணவர் படை வேலைக்கு Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்
  • விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்
  • உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Group Commander, NCC Group Headquarters, 304-A, RR Naidu Industrial Area, Trichy Road, Singanallur Post, Coimbatore – 641 005

First published:

Tags: Job Vacancy