முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அக்னிபத் திட்டத்தில் இந்திய கடற்படையில் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? உங்கள் சந்தேகங்களுக்கு பதில்

அக்னிபத் திட்டத்தில் இந்திய கடற்படையில் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? உங்கள் சந்தேகங்களுக்கு பதில்

இந்திய கடற்படை

இந்திய கடற்படை

Navy Agneepath Recruitment 2022 : விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.15 ஜூலை 2022 முதல் 22 ஜூலை 2022 வரை விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படை மற்றும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க நாளையோடு கால அவகாசம் நிறைவடைய உள்ளது.

இதுவரை இந்திய விமானப்படை வேலைக்கு இந்தியா முழுமையும் இருந்து இரண்டே முக்கால் லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் அதிக நபர்கள் அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

தற்போது விமான படை வேலைவாய்ப்பு அறிவிப்பு நாளையோடு முடியவுள்ளதையடுத்து கடற்படை மற்றும் ராணுவப்படைக்கான விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. அதில் கடற்படைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 15 ஜூலை 2022 முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடற்படைக்கு மொத்தம் மொத்த காலியிடங்கள் 2800 இதில் 560 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ​வேதியியல், கணினி அறிவியல் , உயிரியல் பாடமாக கொண்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

வயது தகுதி : விண்ணப்பதாரர்கள் 01 நவம்பர் 1999 முதல் 30 ஏப்ரல் 2005 வரை பிறந்திருக்க வேண்டும். 17.05 வயது முதல் 21 வயது வரையிலான ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருமண நிலை : திருமணமாகாத ஆண் மற்றும் திருமணமாகாத பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இந்திய கடற்படையில் அக்னிவீரராக விண்ணப்பிப்பவர்கள் ab-initio பயிற்சி முடியும் வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பத்தாரர் ab-initio பயிற்சியின் போது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகக் கண்டறியப்பட்டாலோ, அவர்/அவள் சேவையிலிருந்து நீக்கப்படலாம்.

Navy Agneepath Recruitment 2022 : விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்
  • 15 ஜூலை 2022 முதல் 22 ஜூலை 2022 வரை விண்ணப்பிக்கலாம்.
  • இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindiannavy.gov.in. பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்
  • ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது சரியான விவரங்கள். ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் கடைசி தேதிக்கு முன்னரே திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • கடைசித் தேதிக்குப் பிறகு திருத்தம் செய்ய இயலாது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் மொத்தம் 45,000 பேருக்கு வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதலாவது ஆண்டில் 30,000 சம்பளமும் , இரண்டாம் ஆண்டில் 33, 000 , மூன்றாம் ஆண்டில் 36,500 4ம் சம்பளமும் ,4ம் ஆண்டில் 40,000 சம்பளமும் அக்னிபத் திட்டத்தில் இணையும் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

LAST DATE OF ONLINE APPLICATION – 22 JUL 22

அக்னிபாத் இந்திய கடற்படையில் அறிவிப்பு

https://www.joinindiannavy.gov.in/files/Advertisement.pdf

இந்த பக்கத்தில் pdf உள்ளது. விவரங்களை காணவும்

First published:

Tags: Agnipath, Employment, Job Vacancy