கப்பல் பணிமனையில் பயிற்சிப் பணிகள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.5

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

news18
Updated: December 3, 2018, 8:22 PM IST
கப்பல் பணிமனையில் பயிற்சிப் பணிகள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.5
மாதிரிப் படம்
news18
Updated: December 3, 2018, 8:22 PM IST
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலுள்ள நேவல் டாக்யார்டு அப்பரன்டிஸ் ஸ்கூல் எனப்படும் கப்பல் பணிமனை பயிற்சி மையத்தில் 275 பேருக்கு  அப்பரன்டிஸ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பிரிவு வாரியாக: எலக்ட்ரீசியன், எலக்ட்ரோ பிளேட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், ஃபிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், டூல் மெயின்டனன்ஸ், பெயின்டர், பேட்டன் மேக்கர், ஏ.சி. மெக்கானிக், கார்பென்டர், மெக்கானிக், பவுன்டரிமேன், பைப் ஃபிட்டர் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-4-1998 மற்றும் 1-4-2005 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் www.apprenticeship.gov.in என்ற வலைதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, அதன் நகலுடன் குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்துடன் கப்பல் தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 5. மேலும், நகல் விண்ணப்பங்களை டிசம்பர் 12-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.indiannavy.nic.in, https://www.indiannavy.nic.in/sites/default/files/trade_apprentices1.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Loading...

Also watch

First published: December 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...