மத்திய அரசு உர நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள்!

என்எஃப்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சீனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்போர் 48 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் ஃபெர்டிலைஸர்ஸ் லிமிடெட் (National Fertilizers Limited) நிறுவனத்தில் 42 அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதில் 40 இடங்கள் அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கும், 2 இடங்கள் சீனியர் மேனேஜர் பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சீனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்போர் 48 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ., காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அக்கவுன்ட்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ. 700-ம், சீனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ. 1000-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 14. தேர்வு முறை, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களுக்கு http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADVERTISEMENT%20-%2015112018.pdf, http://www.nationalfertilizers.com/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

Published by:DS Gopinath
First published: