படித்த வேலையற்ற எஸ்சி/எஸ்டி சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் (National Career Service Centre for SC/STs) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " சென்னை, புதுச்சேரியில் 11 மாத கால அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டித்தேர்வு பயிற்சி, கணினிப்பயிற்சி சுருக்கெழுத்து பயிற்சி ஆகியவை இலவசமாக திறன்வாய்ந்த தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் 01 ஜூலை 2022 முதல் ஆரம்பமாக உள்ளது.
பயிற்சி காலத்தில் உதவித்தொகை ரூ 1000/-,வழங்கப்படும் மற்றும் இலவசமாக போட்டி தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களும் வழங்கப்படும்.
பயிற்சி காலம் | 11 மாதம்; ஜுலை 1 முதல் |
உதவித் தொகை | மாதம் ரூ.1000 (தேர்வர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது நல்லது; NCS போரட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும்) |
இடம் | சென்னை, புதுச்சேரியில் உள்ள தேசிய வாழ்வாதார சேவை மையம் (NCS) |
கல்வி கட்டம் | இலவசம் |
வயது | 1.07.2022 அன்று 27 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. |
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் | 24.06 2022 |
இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விருப்ப மனுவை கல்வி மற்றும் குடும்பம் பற்றிய சுய விபரங்களுடன் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், மூன்றாம் தளம், வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம், சென்னை , தமிழ்நாடு என்ற முகவரிக்கு 24.06 2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 27 வயதுக்குள் இருக்கவேண்டும்.
மேலும், விவரங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் www.labour.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job