Home /News /employment /

அப்ரண்டிஸ்களின் வங்கி கணக்குக்கு நேரடி பணம்- மத்திய அரசு

அப்ரண்டிஸ்களின் வங்கி கணக்குக்கு நேரடி பணம்- மத்திய அரசு

காட்சிப் படம்

காட்சிப் படம்

அரசு தனது பங்களிப்பை தொழிற்பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகையை நேரடியாக செலுத்தும். 

    தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்  அறிமுகப்படுத்தியுள்ளது.

    கடந்த 2016ம் ஆண்டு முதல், திறன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளால் தொழிற்பழகுநர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்களில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து தொழிற்பழகுநர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ 1500/- க்கு மிகாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட உதவித்தொகையில் (அடிப்படை பயிற்சிக் கட்டணம் - ரூ,7,500) 25 சதவீதம் பங்கீட்டுத் தொகையாக வேலையளிப்போருக்கு வழங்கப்படுகிறது. தற்போது வரை, இத்திட்டத்தின் கீழ் 12 லட்சம் தொழிற்பழகுநர்கள் பயனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது, இத்திட்டத்தை நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் (Direct Beneficiary Transfer (DBT) scheme) கீழ் கொண்டு வரப்படுவதால், அரசு தனது பங்களிப்பை தொழிற்பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகையை நேரடியாக செலுத்தும்.

    இதையும் வாசிக்கமாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை - காஞ்சிபுரம் ஆட்சியர் 

    இம்முயற்சியைப் பாராட்டிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், திறன் இந்தியாவின் கீழ் தொழிற்பயிற்சி பெரும் ஊக்கத்தை பெறுகிறது என்றார். தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், முதல்நிலைப் பழகுநர்கள் தங்கள் கணக்குகளில் உதவித்தொகை மானியத்தைப் பெற்றுள்ளனர் என்றார். இது தொழிற்பயிற்சிக்கு ஊக்கமளிப்பது மட்டுமின்றி, திறன் இந்தியாவின் திறனை உணர்ந்து கொள்வதற்கும் உதவுவதாக அவர் தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? புள்ளிவிவரங்கள் வெளியானது   

    இளம் இந்தியாவை திறன், மீள்திறன் மற்றும் மேம்பாடு, தனிநபர் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க மற்றும் தேசிய பணிகளுக்கு ஆதரவளிக்க, பயிற்சியை ஒரு பங்கேற்பு இயக்கமாக மாற்றுவது கட்டாயமாகும். இது நிகழ்நேர தொழில்துறை சூழல்களுக்கு மனிதவளப் பயன்பாட்டுடன், பயிற்சியின் போது பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வாய்ப்பை அனுமதிக்கிறது. இது அரசு, வணிகங்கள் மற்றும் கல்வி அமைப்புகளுடன் இணைந்து நிலையான திறன் மேம்பாட்டு உத்திகளை உருவாக்குவதன் மூலம் திறன் இந்தியா பணிக்கு ஊக்கமளிக்கிறது. அமைச்சகத்தின் நோக்கம், திறன் மேம்பாட்டின் இத்தகைய நிலையான மாதிரியின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேலும் ஊக்குவிப்பதும், பிரதமர் த நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கை நனவாக்க உதவுவதும் ஆகும்  என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Apprenticeship, Central government

    அடுத்த செய்தி