சென்னை உள்ளிட்ட நாட்டின் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தேசிய தொழிற் பழகுனர் மேளா (National Apprentice Mela) நடத்தப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கல்விக்கான தகுதி: குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். திறன் பயிற்சி சான்றிதழ், ஐடிஐ, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்கலாம்.
வெல்டிங், மின்சார பணியாளர் வேலை, வீட்டு பராமரிப்பு, அழகுக்கலை, மெக்கானிக் போன்ற 500-க்கும் மேற்பட்ட தொழிற் பிரிவுகளில், தங்களுக்குப் பிடித்தமான பிரிவை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம். இந்த ஒரு நாள் மேளா-வில் 36 துறைகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 500 வெவ்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்கேற்று, தொழிற் பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்தப் பயிற்சியை முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, NCVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
மேளா நடைபெறும் இடங்கள்:
சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சிவகங்கை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இந்த மேளா நடைபெறுகிறது.
சென்னை:
தொழிற் பழகுனர் மேளா நிலையம் |
இடம் |
---|
GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE |
KATHIVAKKAM ROAD, MINT, NORTH CHENNAI -600021 |
GOVERMENT INDUSTRIAL TRAINING INSTITUTE, MINT, NORTH CHENNAI |
No.55, Kathivakkam High Road,Washermenpet, Chennai-600021. |
GOVT. ITI, NORTH CHENNAI |
55, K.H. Road, washermenpet, Chennai-600021 |
GOVERMENT INDUSTRIAL TRAINING INSTITUTE, MINT, NORTH CHENNAI |
55, KATHIVAKKAM ROAD, MINT, NORTH CHENNAI-600021 |
Eduvantage (PPAP Automobile limited) |
KATHIVAKKAM ROAD, MINT, NORTH CHENNAI -600021 |
திருச்சி:
தொழிற் பழகுனர் மேளா நிலையம் |
இடம் |
---|
Government Industrial Training Institute, Trichy |
10.7845,78.7801 |
Govt ITI Trichy |
Tiruchirapalli |
TNSTC |
Trichy |
இதர மாவட்டங்களில் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை
இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், நிறுவனங்களில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து தொழிற்பழகுநர்களுக்கும் (அடிப்படை) பயிற்சிக் கட்டணமாக - ரூ,7,500 வழங்கப்படும். இதில், 25 சதவீதம் பங்கீட்டுத் தொகையை மத்திய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வழங்கும்.
தற்போது, இத்திட்டத்தை நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் (Direct Beneficiary Transfer (DBT) scheme) கீழ் கொண்டு வரப்படுவதால், அரசு தனது பங்களிப்பை தொழிற்பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகையை நேரடியாக செலுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.