நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 150 பயிற்சிப் பணியிடங்கள்

2 ஆண்டு பயிற்சிக் காலத்தில் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். முதலாம் ஆண்டில் மாதம் ரூ. 25,000-மும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.30,000-மும் வழங்கப்படும்.

news18
Updated: November 26, 2018, 5:10 PM IST
நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 150 பயிற்சிப் பணியிடங்கள்
2 ஆண்டு பயிற்சிக் காலத்தில் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். முதலாம் ஆண்டில் மாதம் ரூ. 25,000-மும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.30,000-மும் வழங்கப்படும்.
news18
Updated: November 26, 2018, 5:10 PM IST
நாட்டிலுள்ள பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பயிற்சிப் பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

உதவித் தொகை: 2 ஆண்டு பயிற்சிக் காலத்தில் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். முதலாம் ஆண்டில் மாதம் ரூ. 25,000-மும், இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.30,000-மும் வழங்கப்படும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01/11/2018 நிலவரப்படி 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: வணிகவியல் பட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், சி.ஏ. இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (ஃபைனான்ஸ்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்: ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் ரூ. 600-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 27. மேலும் விவரங்களுக்கு https://nationalinsuranceindia.nic.co.in/portal/page/portal/Corporate/Home/RecruitmentPage என்ற வலைதளத்தை பார்க்கவும்.

Also watch
Loading...
First published: November 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...