ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

நாமக்கல் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிசியன் வேலை: விவரம் உள்ளே

நாமக்கல் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிசியன் வேலை: விவரம் உள்ளே

காட்சிப் படம்

காட்சிப் படம்

பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal |

  நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  காலியிடங்கள்: 31

  பணியின் பெயர்: ஆய்வுக்கூட நுட்பர் நிலை- II (Lab Technician Grade- II)

  மாத ஊதியம்: 15,000 (தொகுப்பூதியம் - Consolidated Pay அடிப்படையில்)

  வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 59

  கல்வித்தகுதி: பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

  மேலும், kings Institute of Preventive medicine (அ) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு (2 ஆண்டுகள்) பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

  முதல்வர்,

  அரசு மருத்துவக் கல்லூரி,

  எண்: 353, பெருந்திட்ட வளாகம்,

  சிலுவம்பட்டி (அ),

  நாமக்கல்,

  நாமக்கல் மாவட்டம் - 637 003

  கல்வித்தகுதி/சாதிச் சான்று/ஆதார் நகல் உள்ளிட்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பப் படிவத்தை  07.10.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க1,535 காலியிடங்கள் : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job, Recruitment