Home /News /employment /

தமிழக நீதித் துறையில் டைப்பிஸ்ட் வேலை.. விரைவில் விண்ணப்பிக்கவும்

தமிழக நீதித் துறையில் டைப்பிஸ்ட் வேலை.. விரைவில் விண்ணப்பிக்கவும்


நீதித்துறையில் காலிஇடங்கள் அறிவிப்பு

நீதித்துறையில் காலிஇடங்கள் அறிவிப்பு

job vacancy : நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைய உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India
    நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக உள்ள கீழே பட்டியலிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தற்காலிகமாக நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அப்பதவிக்கு கீழ்க்கண்ட தகுதிகள் உடையவர்கள் உரிய சான்றிதழ்களின்  நகல்கள் (சுயசான்றொப்பத்துடன் மட்டும்) இணைத்து தபால் மூலம் கீழே குறிப்பிடப்பட்ட உரிய படிவத்துடன் விண்ணப்பிக்கலாம்.

    புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களில் எக்காரணம் கொண்டும் கெஜட் பதிவுள்ள உத்தியோகஸ்தரிடம் சான்றொப்பம் பெறக்கூடாது. சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் இத்தேர்ந்தெடுக்கும் முறைக்கான அடுத்த கட்டத்தில் பங்கேற்க நீதிமன்ற இணையதள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :







































    நிறுவனம் / அமைப்பின் பெயர்நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறை
    பதவிகளின் பெயர்தட்டச்சர் (Typist) (முற்றிலும் தற்காலிகமானது)
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை

    22 காலியிடங்கள்

    Typist - 15

    Steno Typist Grade III - 07
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி09/09/2022
    சம்பள விவரம்











    TypistRs.19,500/- to Rs.62,000/-
    Senior Typist Grade IIIRs.20,600/- to Rs.65,500/-

    கல்வித் தகுதி











    Typist10th Pass to Tamil or English Typist
    Senior Typist Grade IIIType Writing In 2Years Experience

    வயது விவரம்01/07/2022 தேதியின் படி குறைந்த பட்சமாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
    பணியிடம்நாகப்பட்டினம்
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

    விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விபரங்களுடனும், அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச்சன்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும், கலப்புத் திருமணம் மற்றும் பிற) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (உரிய சான்றுடன்) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் "முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்" என்ற முகவரிக்கு 09-09-2022ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

    காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் முன் விண்ணப்பதார்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர் காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது.

    அறிவிப்பினை காண

    https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%202022.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Nagapattinam

    அடுத்த செய்தி