Home /News /employment /

நபார்டு வங்கியில் 177 வளர்ச்சி உதவியாளர் பணி : ஊதியம், கடைசி நாள் குறித்த விவரங்கள்

நபார்டு வங்கியில் 177 வளர்ச்சி உதவியாளர் பணி : ஊதியம், கடைசி நாள் குறித்த விவரங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

வளர்ச்சி அலுவலர் (இந்தி) பணியிடங்களில், 3 இடங்கள் பொது பிரிவினருக்கும், 1 இடம் பட்டியல் பழங்குடியின வகுப்பினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    வளர்ச்சி அலுவலர், வளர்ச்சி அலுவலர் (இந்தி) ஆகிய பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    காலியிடங்கள்: 177

    வளர்ச்சி உதவியாளர் : 173

    வளர்ச்சி உதவியாளர்(இந்தி): 4

    173 வளர்ச்சி உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்களில் பொது பிரிவினருக்கு 80 இடங்களும், ஓபிசி வகுப்பினருக்கு 46 இடங்களும், பட்டியல் வகுப்பினருக்கு 21 இடங்களும், பட்டியல் பழங்குடியினருக்கு 11 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 15 இடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    வளர்ச்சி  உதவியாளர் (இந்தி) பணியிடங்களில், 3 இடங்கள் பொது பிரிவினருக்கும், 1 இடம் பட்டியல் பழங்குடியின வகுப்பினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முக்கியமான நாட்கள்:

    விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் : செப்டம்பர், 15 2022

    இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்:அக்டோபர், 10 2022

    கல்வித் தகுதி: பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மாத சம்பளம்: தோராயமாக மாதம் 32,000 அளவில் இருக்கும்.

    விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.450 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மட்டும் ரூ.450 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    இதையும் வாசிக்கSSC CGL: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, தேர்வு விவரம், விண்ணப்ப செயல்முறை, தெரிவு முறை  என்பன போன்ற முழு விவரங்கள் அடங்கிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    Recruitment of Development Assistant/Development Assistant (Hindi) in Group 'B' - 2022
    Published by:Salanraj R
    First published:

    Tags: Recruitment

    அடுத்த செய்தி