நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? 70 காலியிடங்கள் அறிவிப்பு

news18
Updated: September 6, 2018, 5:56 PM IST
நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? 70 காலியிடங்கள் அறிவிப்பு
நபார்டு வங்கியில் 70 காலியிடங்கள் அறிவிப்பு
news18
Updated: September 6, 2018, 5:56 PM IST
நபார்டு வங்கியில் வளர்ச்சி உதவியாளர் (Development assistant) பணிக்கான 70 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நபார்டு தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியில் வளர்ச்சி உதவியாளர்களாக 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது.

இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 12.

விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகளாகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும்  இருக்கவேண்டும். ஓ.பி.சி.பிரிவினர், எஸ்.சி. எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். இத்தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவோர் 2-வது நிலை தேர்வு எழுத தகுதி பெறுவர். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
First published: September 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...