ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கொட்டிக்கிடக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

கொட்டிக்கிடக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Private Jobs in Tamil Nadu: தமிழ்நாடு அரசின் தனியார்துறை வேலை இணையம் (Tamil Nadu Private Job Portal) என்ற இணையதளம் தனியார் வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுர்களை நேரடியாக இணைக்கிறது

 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, ’தமிழ்நாடு அரசின் தனியார்துறை வேலை இணையதளம்’ (Tamil Nadu Private Job Portal) என்ற  இணையதளத்தை தொடங்கியது.

  இந்த இணையதளத்தில், தற்போது வரை 4,814  தொழிற்நிறுவனங்கள் வேலையளிப்பவராக பதிவு செய்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைதேடுபவர்களாக பதிவு செய்துள்ளனர்.

  சமீபத்திய விவரங்களின் படி, கிட்டத்தட்ட 42 தொழிற் பிரிவுகளின் கீழ் 101,703 பணிக் காலியிடங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இவ்விணையத்தளத்தின் கீழ் பதிவு செய்து, பயனடையலாம். ஊதியம் மற்றும்  இதர தேவைகள், வேலை செய்யும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களின்படி, வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ளலாம்.  இச்சேவை முற்றிலும் இலவசமானது.

  இதையும் வாசிக்க: எஸ்.எஸ்.சி தேர்வுக்கான காலக்கெடு நீட்டிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!

  அதேபோன்று, நீங்கள் வேலை அளிப்பவராக இருந்தால், இந்த இணைய தளத்தில் பதிவு செய்து  உங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற தகுதியான மனித வளத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

  வேலைநாடுநர்கள் பதிவு செய்வது எப்படி?  

  www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையப்  பக்கத்திற்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில், வேலைதேடுபவர் என்பதை தேர்வு செய்து உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும். அதில், புதிய கணக்கை உருவாக்குக என்பதன் கீழ்,  பெயர், தந்தையின் பெயர், மின்னஞ்சல், கைபேசி எண், ஆதார் எண், கடவுச்சொல்   ஆகிய விவரங்கள் உள்ளிட வேண்டும்.

  உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு வெற்றிகரமாக உள்நுழைக.

  அடுத்து சுயவிவரப் பதிவு பக்கத்தில், உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்கள், வீட்டு முகவரி, முன் அனுபவம், கல்வித் தகுதி, மொழி அறிவு, சான்றிதழ், தொழிற்பிரிவுகள், உங்கள் தேவைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை உள்ளீடுக.

  இறுதியாக, மின்னஞ்சல்/கைபேசி எண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட பக்கத்திற்கு செல்லவும்.

  அதில், பல்வேறு வேலையளிப்பவர்கள் பதிவிட்டுள்ள பணிக்காலியிட அறிவிப்புகளை (Job Search) ஆராய்ந்து உங்கள் திறனுக்கும் தேவைக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகளை பெறுக

  உங்களுக்கு ஏற்ற பணியிடங்களை அறிந்துகொண்ட பின், சுயவிவரக்குறிப்பினை உகந்த வேலையளிப்போருக்கு அனுப்பி, நேர்காணலுக்கு ஆயத்தமாகுங்கள்.

  மேலும், தமிழ்நாடு அரசு நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Job Fair)  தொடர்பான அறிவிப்புகளைப் பெற்று, அதில் கலந்து கொண்டும் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

  மேலும், விவரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Jobs, Recruitment, Tamil Nadu Government Jobs