கடந்த 2020-21 நிதியாண்டில் மட்டும், 69,76,240 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கென 2.5 லட்சம் கோடி (2,54,284.4 crores) செலவிடப்பட்டுளளதாக பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில மக்களவை உறுப்பினர் சங்கரசின் ரத்தோட் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் குறித்த கேள்வியை எழுப்பினார்கள். இதற்கு, கடந்த புதன்கிழமை மக்களவை கேள்வி நேரத்தின் போது, பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார்.
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மொத்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களுக்கான செலவினங்கள் குறித்த தகவல் பகிரப்பட்டது.
Sr. No. | துறை | ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை | செலவீனம்(கோடி மதிப்பில்) |
1. | சிவில் ஓய்வூதியதாரர்கள் | 11,28,441 | 64,684.44 |
2. | ராணுவ ஓய்வூதியதாரர்கள் | 36,03,609 (படை வீரர்கள், நிர்வாக பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் என அனைத்துயும் சேர்த்து ) | 1,21,983.9 |
3. | தொடர்புத்துறை ஓய்வூதியதாரர்கள் | 4,32,968 | 14895 |
4. | ரயில்வே ஓய்வூதியதாரர்கள் | 14,82,223 | 51,935.24 |
5. | தபால்துறை ஓய்வூதியதாரர்கள் | 3,28,999 | 785.82 |
மொத்தம் | 69,76,240 | 2,54,284.4 |
அதன்படி 11,28,441 பொது நிர்வாக ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.64,684.44 கோடி செலவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் உள்ள 36,03,609 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ 1,21,983.9 கோடி செலவிடப்பட்டுள்ளது. 14,82,223 ரயில்வே ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.51,935.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. 3 லட்சததுக்கும் அதிகமான (3,28,999) தபால்துறை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வெறும் 785 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதிய கணக்கு அலுவலகம், பாதுகாப்பு கணக்கு தலைமைக் கட்டுப்பாட்டாளர், தபால்துறை, தொலைதொடர்புத்துறை மற்றும் ரயில்வே அமைச்சகம் அளித்த தகவல்களின்படி இத்தகவலை மக்களவையில் மத்தியப் பணியாளர், ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்த போது தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றங்கள்
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தது. இத்திட்டத்தினால், ஓராண்டுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஆகும் செலவு (Recurring Expenditure) சராசரியாக ரூ.7123.38 எனவும் திட்டமிடப்பட்டது. மேலும், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து நிலுவைத்தொகையாக ஓய்வு பெற்ற 20,60,220 ராணுவ ஓய்வூதியதாரர்கள் /ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.19,795 கோடியை மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி முப்படைகளில் அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் அக்னிவீரர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக, பாதுகாப்புத் துறையில் ஒதுக்கப்படும் ஓய்வூதிய செலவினங்கள் பெரிதாகக் குறைக்கப்படும் என்று மத்திய அரசு கருதுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath, One Rank One Pension, Pension Plan