Home /News /employment /

ரயில்வே பாதுகாப்புப் படையில் 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்

ரயில் - மாதிரிப்படம்

ரயில் - மாதிரிப்படம்

ரயில் அமைச்சகத்தான் அதிகாரப்பூர்வ இணையதளமான  indianrailways.gov.in-ல்  வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள்

  • 1 minute read
  • Last Updated :
    ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவிலை என்று இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ரயில்வே பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு பல்வேறு சமூக வலைத் தளங்களில் வெளியானது. அந்த அறிவிப்பில், ரயில்வேத் துறையில் 9000 கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்கள் நிரப்ப இருப்பதாகவும், 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், இந்த அறிவிப்பு முற்றிலும் போலியானது என்று இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதுதொடடர்பாக, வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி பரவி வருகிறது.

     



    ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது ரயில்வே அமைச்சகம் அல்லது அவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளம், அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை"என்று தெரிவித்துள்ளது.

    எனவே, ஆட்சேர்ப்பு தொடர்பான போலியான அறிவிப்புகளை எதையும் நம்ப வேண்டாம். ரயில் அமைச்சகத்தான் அதிகாரப்பூர்வ இணையதளமான  indianrailways.gov.in-ல்  வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இதையும் வாசிக்க889 மருந்தாளுனர் காலி பணயிடங்கள்: மாதம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்

    01.03.2020 நிலவரப்படி, இந்திய ரயில்வேத் துறையில், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 15,07,694 ஆகவும், பணியில் இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை 12,70,399 ஆகவும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,37,295 ஆகவும் இருந்தன. முன்னதாக, ரயில்வேத் துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் குறித்து மக்களவையில் பேசிய ரயில்வேத் துறை அமைச்சர், " 1 லட்சத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரகிறது" என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Indian Railways, Recruitment

    அடுத்த செய்தி