Home /News /employment /

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பிரதமரின் வேலை உருவாக்க திட்டத்தின் கீழ்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் 11.10 கோடி பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா தொற்று காலத்தில் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு தற்சார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண ரானே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “தேசிய மாதிரி கணக்கெடுப்பு (என்எஸ்எஸ்) அலுவலகத்தின் 73வது சுற்றறிக்கையின் படி கடந்த 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, பிரதமரின் வேலை உருவாக்க திட்டத்தின் கீழ்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 11.10 கோடி பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    கடந்த 2016- 2017ம் நிதியாண்டில் 4.08 லட்சம், 2017-18 நிதியாண்டில் 3.87 லட்சம், 2018-19 நிதியாண்டில் 5.87 லட்சம், 2019-20-ம் நிதியாண்டில் 5.33 லட்சம்,   2020-21ம் நிதியாண்டில் 5.95 லட்சம் , 2021-22ம் (15-11-2021வரை) நிதியாண்டில் 2.90 லட்சம் பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    நாட்டில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இத்துறைக்கான மத்திய அமைச்சகம்  பிரதமரின் வேலை உருவாக்க திட்டம், சிறு-குறு தொழில்கள் தொகுப்பு மேம்பாட்டு திட்டம், பாரம்பரியத்  தொழில்களை மீண்டும் ஏற்படுத்தும் நிதி திட்டம், சிறு-குறு தொழில்கள் கடன் உத்திரவாதத்  திட்டம் என பல திட்டங்களை அமல்படுத்துகிறது.

    Also Read: வங்கி வேலைத்தேடுபவரா நீங்கள்.. தேசிய வீட்டுவசதி வங்கியில் காத்திருக்கும் வேலை

    கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஆதரவு அளிக்க தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    • ரூ.20,000 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டது.

    • உத்திரவாதம் இன்றி ரூ.3 லட்சம் கோடி வரை தொழில் கடன்கள் வழங்கப்பட்டன.

    • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான திருத்தபட்ட அளவுகோல்கள்.

    • எளிதாக வணிகம் செய்ய ’உத்யம் பதிவு’ மூலம் சிறு, குறு அல்லது நடுத்தர நிறுவனங்களை நிறுவ விரும்பும் ஒரு தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்ய உதவுவதற்கான முற்றிலும் ஆன்லைன் செயல்முறை.


    • உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Business, Employment, Employment and training department, Employment news

    அடுத்த செய்தி