இந்தியா முழுவதும் உள்ள நேர்காணல் செயல்முறைக்கான கல்வி/தகுதியின் அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கான சமீபத்திய வேலை காலியிடங்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகமானது (Ministry of Home Affairs), லேண்ட் போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் (Land Ports Authority of India - LPAI) குரூப் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றுக்கான பல பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க MHA அதிகாரப்பூர்வ வெப்சைட்டான
mha.gov.in-க்கு விசிட் செய்யலாம். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 24, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய நில துறைமுக ஆணையம் (LPAI) என்பது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மற்றும் இந்திய நிலத் துறைமுக ஆணையச் சட்டம், 2010 மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பு இந்தியாவின் எல்லைகள் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் பல ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளை (Integrated Check Posts - ICPs) நிர்வகிக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள காலி பணியிடங்களின் விவரங்களை சரிபார்க்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் MHAன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான
mha.gov.in-ன் ஹோம் பேஜில் உள்ள ‘vacancies’ டேபை தேட வேண்டும். பின் vacancies செக்ஷனில் இருக்கும் புதுடெல்லி LPAI செயலகத்தில் உள்ள ‘குரூப் ‘A’, ‘B’ & ‘C’ பணியிடங்களை நிரப்புவதற்காக கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும். காலி பணி இடங்கள் குறித்த அனைத்து விவரங்களும் PDF டாக்குமெண்ட் வடிவில் கிடைக்கும்.
செகரட்டரி, செக்ஷன் ஆஃபீசர், பிரைவேட் செகரட்டரி, அசிஸ்டன்ட் இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்), அசிஸ்டன்ட் இன்ஜினியர் (சிவில்), அக்கவுண்டன்ட், சீனியர் அக்கவுண்டன்ட், பர்சனல் அசிஸ்டன்ட், ஜூனியர் இன்ஜினியர் (சிவில் & எலெக்ட்ரிக்கல்) உள்ளிட்ட போஸ்ட்டின் கீழ் 15 பணிகளில் காலியிடங்கள் உள்ளன. இவை தவிர ஒருங்கிணைந்த சோதனை சாவடிகளில் (Integrated Check Posts), மேனேஜர், அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டெனோகிராஃபர் கிரேடு-டி போன்ற 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ALSO READ | திருச்சி சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
இந்த போஸ்ட்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அட்டாரி, ஜோக்பானி, ரக்சால், அகர்தலா, டாவ்கி, பெட்ராபோல் மற்றும் மோரே ஆகிய இடங்களில் உள்ள ICP-க்களில் பணியமர்த்தப்படலாம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் டெப்புடேஷன் பீரியட் (deputation Period) ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதை விண்ணப்பதார்ர்கள் கவனிக்க வேண்டும். டெப்புடேஷன் பீரியடானது மத்திய அரசில் உள்ள அதே அல்லது வேறு சில அமைப்பு அல்லது துறைகளில் இந்த நியமனத்திற்கு முன்னதாக உடனடியாக நடைபெற்ற மற்றொரு முன்னாள் கேடர் பதவியின் டெப்புடேஷன் பீரியடை உள்ளடக்கும் என்று அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.