மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுண்ணறிவுப் பிரிவில் (Intelligence Bureau) குரூப் பி மற்றும் குரூப் சி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவுப் பிரிவின் கீழ் அசிஸ்டெண்ட் செண்ட்ரல் இண்டெலிஜன்ஸ் ஆபிசர், செக்யூரிட்டி அசிஸ்டெண்ட், ஜூனியர் இண்டெலிஜன்ஸ் ஆபிசர் போன்ற பணிகளில் 766 இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ள நபர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mha.gov.in/ என்ற தளத்தில் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம். உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆகும்.
டெபுடேசன் அடிப்படையில் பணி
உள்துறை அமைச்சகத்தின் நுண்ணறிவுப் பிரிவில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு டெபுடேசன் அடிப்படையில் பணி வழங்கப்பட இருக்கிறது. பணிக்காலம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். இதை தொடர்ந்து டெபுடேசன் கால வரம்பு என்பது மேலும் 7 ஆண்டுகள் வரையில் நீட்டிப்பு செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: DRDO-ல் 630 காலிப்பணியிடங்கள். கேட் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், பணி நியமன நடவடிக்கையின்போது இந்த எண்ணிக்கை குறையலாம் அல்லது அதிகரிக்கலாம் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்கள் அகில இந்திய அளவில் உள்ள பணியிடங்கள் ஆகும். ஆகவே பணி மாறுதல் விதிக்கு உட்பட்டது.
நுண்ணறிவு பிரிவு நியமனம் 2022 - காலிப்பணியிட விவரம்
ஏசிஐஓ-1 / அதிகாரி - 70
ஏசிஐஓ-2 / அதிகாரி - 350
ஜேஐஓ - 1/ அதிகாரி - 50
ஜேஐஓ - 2 / அதிகாரி - 100
ஜேஐஓ-1 / மோட்டார் போக்குவரத்து - 20
ஜேஐஓ -2 / மோட்டார் போக்குவரத்து - 35
ஜேஐஓ - 2/டெக் - 7
எஸ்ஏ/அதிகாரி - 100
எஸ்ஏ/ மோட்டார் போக்குவரத்து - 20
ஹவாய் மற்றும் சமையலர் - 9
பராமரிப்பாளர் - 5
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். சமையலர் பணிக்கு 8ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
வயது தகுதி: விண்ணப்பம் செய்பவர்களின் வயது 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
* அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
* ஹோம்பேஜ் பக்கத்தில் உள்ள நியமன லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
* உங்கள் பெயரை பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
கட்டணத்தை செலுத்துங்கள்.
* விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஊதிய விவரம்: விண்ணப்பதாரர்கள் என்ன பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை பொறுத்து ஊதிய விகிதம் மாறுபடும். 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையில் 3ஆம் படி முதல் 8ஆம் படிநிலை வரையிலான அளவுகோளில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
இதையும் வாசிக்க: நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு எப்போது வெளியாகும்?
உதாரணத்திற்கு அசிஸ்டெண்ட் செண்ட்ரல் இண்டெலிஜன்ஸ் ஆபிசர் பணிக்கு ரூ.47,600 தொடங்கி ரூ.1,51,100 என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும். இதேபோன்று மற்ற பணிகளில் அதிகாரி நிலையில் சேருபவர்களுக்கு ரூ.25,500 முதல் ரூ.81,000 வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கபட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து, சமையலர் உள்ளிட்ட பணிகளில் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs