ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அக்னி வீரர்களுக்கு பாதுகாப்புத் துறையில் 10% இடஒதுக்கீடு: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

அக்னி வீரர்களுக்கு பாதுகாப்புத் துறையில் 10% இடஒதுக்கீடு: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஏற்கனவே, நடைமுறையில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு மேல் இந்த காலி இடங்கள் இருக்கும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களை நிறைவு செய்த அக்னி வீரர்களுக்கு, இந்திய பாதுகாப்புத் துறையில் 10% காலி இடங்களை ஒதுக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

  இதுகுறித்து, பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் குறிப்பில், " தகுதி நிபந்தனைகளை நிறைவு செய்யும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் 10% இடங்கள் ஒதுக்கப்படும்.

  இந்திய கடலோரக் காவல் படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து 16 பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்த 10% காலி இடங்கள் ஒதுக்கப்படும்.

  ஏற்கனவே, நடைமுறையில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு மேல் இந்த காலி இடங்கள் இருக்கும்.  இதனை செயல்படுத்தும் விதமாக ஆட்சேர்ப்பு விதிமுறைகள் திருத்தியமைக்கப்படும்.

  தகுதி நிபந்தனைகளை தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைக்க பொதுத் துறை நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.

  முன்னதாக, அக்னிபத் திட்டம்' மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த வீரர்களுக்கு மத்திய ஆயுதக் காவல்படை, அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

  இதையும் வாசிக்க:   மத்திய ஆயுத காவல்படையில் 10% இடஒதுக்கீடு: அக்னிவீரர்களுக்கு பலன் தருமா?

  மேலும், அக்னிவீரர்கள் மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பிற்கு மேல் 3 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை பெற தகுதியுடைவராவார்கள் என்றும், அக்னிபத் திட்டத்தின் முதல் பேட்ச் வீரர்கள் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை பெற தகுதியுடையவராவார்கள் என்றும் தெரிவித்தது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Army jobs