Home /News /employment /

இந்திய உளவுத் துறையில் 766 காலி இடங்கள் : விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்திய உளவுத் துறையில் 766 காலி இடங்கள் : விண்ணப்பம் செய்வது எப்படி?

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஆட்சேர்ப்பு அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன்

    இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

     ஆட்சேர்ப்பு எண்ணிக்கை தோராயமானது என்றும், நிர்வாகக் காரணங்களால் அதிகரிக்கக்  கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆட்சேர்ப்பின் மூலம் உளவுத் துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு அயல்பணி அடிப்படையில் (Debutation Basis) 766 பேர் நியமிக்கப்பட உள்ளனர். 7 ஆண்டுக்கு மிகாமல், குறைந்தது 3 அல்லது 5 காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அயல்பணி அடிப்படையில் இந்த நியமனம் இருக்கும்.

    பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, விதிமுறைகள், சம்பளம், விண்ணப்ப செயல்முறை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் https://www.mha.gov.in/  என்ற இணையத்தளத்தில் உள்ள  Intelligence Bureau Vacancy circular June 2022 என்ற விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

    எப்படி விண்ணப்பம் செய்வது? 

    ஆட்சேர்ப்பு அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

    Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S
    P Marg, Bapu Dham, New Delhi-110021.

    Intelligence Bureau Vacancy circular June 2022
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs

    அடுத்த செய்தி