ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ACIO/II Tech Examination: உதவி ரகசிய அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- 150 பணியிடங்கள்

ACIO/II Tech Examination: உதவி ரகசிய அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- 150 பணியிடங்கள்

MHA Recruitment ACIO/II Tech Examination

MHA Recruitment ACIO/II Tech Examination

உதவி  ரகசிய அதிகாரி கிரேடு II -  தொழிநுட்பம் சார்ந்த பணி (Assistant Central Inteligent officer- Grade II/Technical)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரகசியப்  பிரிவில் உதவி ரகசிய அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: 

உதவி  ரகசிய அதிகாரி கிரேடு II -  தொழிநுட்பம் சார்ந்த பணி (Assistant Central Inteligent officer- Grade II/Technical)

கணினி அறிவியல் துறை (Computer Science  & Information Technology)மற்றும் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறை (Electronics and Communication) பின்னணி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான நாட்கள்: 

அறிவிக்கை நாள்: 16-04-2022

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07-05-2022

காலிப்பணியிடங்கள்:  150

 கல்வி பின்னணி பொருளாதாரத்தில் நலிவடைந்த வகுப்பினர்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பட்டியல் கண்ட சாதிகள்பட்டியல் கண்ட பழங்குடிகள்பொதுப்பிரிவு இடங்கள்மொத்தம்
கணினி அறிவியல் துறை66863056
மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறை9916105090

அடிப்படைத் தகுதி: 

2020/21/22 அமர்வுகளில், கணினி அறிவியல் மற்றும் மின்னணுவியல் பாடங்களில் தகுந்த கேட் மதிப்பெண் பெற்றிக்க வேண்டும். 

அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து இதுதொடர்பான துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது)

இயற்பியல், மின்னணுவியல் ஆகிய பாடங்களில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை : 

கேட் மதிப்பெண்நேர்காணல் மதிப்பெண்
1000175

கேட் மதிப்பெண் மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள். இதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பகார்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்படும்.

வயது வரம்பு: 

குறைந்தபட்ச வயது - 18

அதிகபட்ச வயது - 27

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர்  5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

மாற்றுத் திறனாளிகள் இப்பணிக்கு விண்ணப்பம் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு  இங்கே 

உடனடியாக விண்ணப்பியுங்கள்:

கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

Published by:Salanraj R
First published:

Tags: Jobs