மத்திய ஆயுதக் காவல்படையில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு - உள்துறை அமைச்சகம்
மத்திய ஆயுதக் காவல்படையில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு - உள்துறை அமைச்சகம்
ஆயுதப்படை
10% Reservation: அக்னிவீரர்கள் மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பிற்கு மேல் 3 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை - மத்திய உள்துறை அமைச்சகம்
10% Reservation: அக்னிபத் திட்ட த்தின் கீழ் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த வீரர்களுக்கு மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அக்னிவீரர்கள் மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பிற்கு மேல் 3 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை பெற தகுதியுடைவராவார்கள் என்றும், அக்னிபத் திட்டத்தின் முதல் பேட்ச் வீரர்கள் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை பெற தகுதியுடையவராவார்கள் என்றும் தெரிவித்தது.
முன்னதாக, முன்னதாக, இந்திய பாதுகாப்புப் படைகளில் இணைவதற்கான ’அக்னிபாத்’ என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், ஆயுதப் படைகளில் 4 ஆண்டுகள் இளைஞர்கள் இணைந்து பணியாற்றலாம்.
The MHA also decides to give 3 years age relaxation beyond the prescribed upper age limit to Agniveers for recruitment in CAPFs & Assam Rifles. Further, for the first batch of Agniveer, the age relaxation will be for 5 years beyond the prescribed upper age limit.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022
இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஆட்சேர்ப்பு நடைபெறாததை அடுத்து, அக்னி வீரர்களின் வயது உச்சவரம்பை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.