தமிழகத்தில் காலியாக உள்ள 209 டார்க் ரூம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பபிப்பதற்கான கால அவகாசம் வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், உடனடியாக இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆட்சேர்ப்பு அறிவிப்பு:
முன்னதாக, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 209 டார்க் ரூம் உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை 16.03.2022 அன்று வெளியிட்டது.
காலி பணியிடங்கள்: 209
ஊதியம் : 19500 – 62000
ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கான கடைசி தேதி: 05:04:2022
கல்வித் தகுதி: Physics, chemistry, Botany, Zoology ஆகிய பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், மத்திய,மாநில அரசுகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் டார்க் ரூம் உதவியாளர் பயிற்சி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை : 10ம் வகுப்பு முடிவுகளுக்கு 20% மதிப்பெண்களும் , 12 ம் வகுப்பு முடிவுகளுக்கு 30% மதிப்பெண்களும், உதவியாளர் சான்றிதழுக்கு 50% மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில், விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விண்ணப்பக் கட்டணம்: ஆட்சேர்ப்புத் தேர்வுக்கட்டணமாக ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறத் தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / மாற்றுத்திறனாளிகள் , அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட பிரிவினர் ரூ. 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டோ மற்றும் கையொப்பங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும்,
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ட்விட்டர் லிங்கை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.