ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..விண்ணப்பிக்கத் தகுதிகள் என்ன?

மத்திய அரசின் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..விண்ணப்பிக்கத் தகுதிகள் என்ன?

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

Central govt jobs alert : விமானத் தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விமான, ஹெலிகாப்டர் மற்றும் விமான பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)மருத்துவ பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
  Medical Superintendent (Anaesthesia/Paediatrics/ Radiology/ Ophthalmology/Superintendent)6
  Sr. Medical Officer (General Medicine/Orthopaedics)3
  General Duty Medical Officer1
  மொத்தம்10

  கல்வித்தகுதி:

  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி , MBBS தேர்ச்சியுடன் Post Graduate Degree in (Orthopaedics / DNB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  வயது வரம்பு:

  அதிகபட்சம் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.General Duty Medical Officer பணிக்கு அதிகபட்சம் வயது 35 வரை.

  சம்பளம் :

  இப்பணிக்குச் சம்பளம் மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை.

  தேர்வு செய்யப்படும் முறை:

  தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப் பூர்வத்தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பக் கட்டணம்:

  இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதனை Hindustan

  Aeronautics Limited Koraput Division” payable at Sunabeda-2, SBI

  Branch Code 1304- இல் Demand Draft-இல் செலுத்த வேண்டும்.

  Also Read : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு

  ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய :  https://hal-india.co.in/Common/Uploads

  தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

  The Sr. Manager (HR),

  Recruitment Cell,

  Hindustan Aeronautics Limited, Koraput Division,

  Sunabeda-763002, Dist: Koraput, Odisha.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs