ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்... சென்னை ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்... சென்னை ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மத்திய அரசின் ரிசர்வ் வங்கி மருத்துவப் பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசின் ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில் காலியாக உள்ள Medical Consultants (MCs) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான முழு விவரங்கள் இங்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ரிசர்வ் வங்கி வேலைக்கான விவரங்கள்:

  பணியில் பெயர்Medical Consultants ( Contract basis )
  காலியாகவுள்ள இடங்கள்5
  தேர்ந்தெடுக்கப்படும் பிரிவுGeneral-3,BC-1,SC-1
  கல்வித்தகுதிஅங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  அனுபவம்விண்ணப்பதார்கள் குறைந்தது 2 வருடம் மருத்துவத் துறையில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  சம்பளம்தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

  சென்னையில் உள்ள 5 இடங்கள்:

  • இந்திய ரிசர்வ் வங்கி, அனெக்ஸ் கட்டிடம், 16, கிலாசிஸ் கோட்டை, ராஜாஜி சாலை,சென்னை - 600001.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு, பிசண்ட் நகர்.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு, கே.கே.நகர்.
  • இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குடியிருப்பு, எஸ்ஏஃப் கேம்ஸ் கிராமம், கோயம்பேடு.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு, சூளைமேடு பிரதான சாலை.
  • இந்திய ரிசர்வ வங்கி அதிகாரிகள் குடியிருப்பு, அண்ணா நகர்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியானவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு அதனைப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனைத்து சான்றிதழ்களின் நகலுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.11.2022 மாலை 5 மணி

  Also Read : ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு... முழு விவரம்!

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

  Regional Director, Human Resource Management department, Reserve Bank of India, Fort Glacis,16, Rajaji Salai, Chennai - 600 001

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://opportunities.rbi.org.in

  மேலும் தகவலுக்கு : www.rbi.org.in.

  Published by:Janvi
  First published:

  Tags: Bank Jobs, Jobs, RBI