மத்திய அரசு அலுவலகத்தில் உள்ள மீடியா பணிகளுக்குத் தகுதியானவர்களுக்கு பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வேலைவாய்ப்பு அறிவிப்பை விடுத்துள்ளனர்.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் |
Content Auditor | ரூ.49,800/- |
Monitors | ரூ.28,635/- |
Monitors மொழிகள்:
ஹிந்தி, ஆங்கிலம், அச்சாம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாப்பி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது.
கல்வித்தகுதி:
Content Auditor பணிக்கு Journalism/ Mass Communication முதுகலை டிப்ளமோ மற்றும் மூன்று ஆண்டுகள் அனுபவம் தேவை அல்லது ஓய்வு பெற்ற செய்தியாளராக இருக்கலாம்.
Monitor பணிக்கு Journalism/ Mass Communication இளங்கலை பட்டம் / முதுகலை டிப்ளமோ முடித்தவராக இருக்க வேண்டும். அந்த மொழியில் தகுதியானவராக இருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் அனுபவம் தேவை.
Also Read : ரூ.1 லட்சம் சம்பளம்.. நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 213 காலிப்பணியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் வேலை அனுபவம் பற்றிய தகவல்களை hrsection@becil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் அதனைத் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Deputy General Manager (MR), Broadcast Engineering Consultants India Limited(BECIL), BECIL Bhawan, C-56, A/17, Sector-62, Noida-201301.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 26.12.2022.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Jobs, Mass Media