Home /News /employment /

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் கணினி இயக்குபவர் வேலை - டைப் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் கணினி இயக்குபவர் வேலை - டைப் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கணினி இயக்குபவர்

கணினி இயக்குபவர்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20/07/2022 ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமணம் அமையும்.

    மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும் ஆகியவற்றிற்கு உதவியாளர் (ம) கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு மாதம் ரூ.9000/- தொகுப்பூதியத்தில் சம்பளம் வழங்கப்படும். முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 10th / SSLC தேர்ச்சி பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Senior Grade) முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் தகுதியாக வைத்திருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் கணினி சார்ந்த பணிகளில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 40 வயது நிறைவடையாதவராக இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் (https://mayiladuthurai.nic.in/) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

    தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2, திருமஞ்சனவீதி, திருஇந்தளூர், மயிலாடுதுறை 609001 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20/07/2022 ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமணம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

    விண்ணப்ப படிவம் பெற

    https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/07/2022070427.pdf

    அறிவிப்பினை பெற

    https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/07/2022070475.pdf

    இதில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Mayiladuthurai

    அடுத்த செய்தி