ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடம் - மாதம் ரூ.30,000/- சம்பளம்

மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடம் - மாதம் ரூ.30,000/- சம்பளம்

கணினி இயக்குபவர்

கணினி இயக்குபவர்

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்கான விண்ணப்பங்களை www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், (Protection Officer ) பணிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாதம் ரூ.30,000/- தொகுப்பூதியத்தில் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் MA Sociology / Psychology/ Social Work with Computer Knowledge முறையிலான கல்வி பயின்று குறைந்தபட்ச வயது - 22, அதிகபட்ச வயது - 35, SC/ST-35 வயது , MBC/BC-32 வயது, முற்பட்ட வகுப்பினர்-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், Door.No./3/264 குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை 609 001 என்ற முகவரிக்கு செய்த 15 நாட்களுக்குள் அன்று மாலை 5.45 மணிக்குள் விளம்பரம் செய்த கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04364-212429 என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம்.

இதே போன்று, மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கணிணி இயக்குபவர் -1 நபர் மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கிலம் (SENIOR GRADE) முடித்திருக்கவேண்டும்.

கணிணியிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், Door.No./3/264 குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை - 609001 என்ற முகவரிக்கு விளம்பரம் செய்த 15 நாட்களுக்குள் அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04364-212429, என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம்.

First published:

Tags: Job Vacancy